இதய நோய்க்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

இதய நோய்க்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
இதய நோய்க்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை


















இதய நோய்க்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை குறித்து கிம்ஸ் மருத்துவமனை டாக்டர் பிரவீன் கூறியதாவது:-

உலகளவில் இதய நோய்கள் தான் இறப்புக்கான காரணத்தில் முதலிடம் பிடித்துள்ளது. பிற காரணத்தை காட்டிலும் மாரடைப்பு மற்றும் இதய நோய்களால் தான் ஆண்டு தோறும் பலர் இறக்கின்றனர். டாக்டர் ஆன்ட்ரக் குருன்ட்ஸிக் மூலம் முதன் முதலில் ஆஞ்சியோ பிளாஸ்டி வழிமுறை கண்டு பிடிக்கப்பட்டது.
ஆஞ்சியோபிளாஸ்டி முன்னேற்றமடைந்து உலகளவில் முன்னோக்கி சென்றுள்ளது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் இதயநாள அடைப்புக்காக கோடிக் கணக்கான மக்கள் ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் சிகிச்சை பெறுகின்றனர்.

ஆஞ்சியோ பிளாஸ்டி அல்லது பெர் கியூடானியஸ் கோரானரி இன்டர்வென் சன் என்பது இதய ரத்த நாளங்களில் அடைப்பை அகற்று வதற்கான குறைந்தபட்ச துளையிடும் அறுவை சிகிச்சை அற்ற சிகிச்சையாகும். இதில் காதேடர் என்றழைக்கப்படும் ஒரு குழாய் இதய ரத்த நாளத்துக்குள் அனுப்பப்படுகிறது. இதய ரத்த நாளத்தின் ஒடுக்கிய பகுதியை திறக்க செய்ய ஒரு பலூன் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் அந்த ஒடுங்கிய நாளத்தை விரிவடைந்து இருக்க செய்யும் வகையில் ஒரு ஸ்டென்ட் அங்கே வைக்கப்படுகிறது. இது மாரடைப்பின்போது ஒரு அவசரகால சிகிச்சையாக அல்லது இதயநோய்க்கு காரணமாகும் அடைப்புக்கான தெரிவு செய்த நடைமுறையாக மேற்கொள்ளப்படுகிறது (https://www.maalaimalar.com/health/generalmedicine/2020/02/04131410/1284172/angioplasty-for-heart-attack.vpf)


Comments