சாதரண உடல் உபாதைகளுக்கு வீட்டில் இருக்கும் மூலிகை பொருட்கள் பற்றியும் அதன் வைத்தியமுறையையும் காண்போம்.
இயற்கையான ஆயுர்வேத குணங்கள் அமைந்த நமது சமையலறைப் பொருட்கள் பல உபாதைகளை போக்கி, உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.
அத்தகையகைய பொருட்களைப் பற்றி காண்போம்.
Tip From : https://tamil.samayam.com/lifestyle/health/natural-ayurvedic-medicines-for-ordinary-health-issues/articleshow/57431290.cms
இயற்கையான ஆயுர்வேத குணங்கள் அமைந்த நமது சமையலறைப் பொருட்கள் பல உபாதைகளை போக்கி, உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.அத்தகையகைய பொருட்களைப் பற்றி காண்போம்.
சீரகம்:
சீரகத்தைப் பொன்வறுவலாக வறுத்து தூள் செய்து கொதிநீரில் இட்டு காய்ச்சிக் குடித்தால் உண்ட உணவை சீரணமாக்கி பசியைத் தூண்டுவதுடன் உணவுப்பாதையையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
கால் ஆணிக்கு:
கால் ஆணிக்கு:
மருதாணி இலைகள், சிறிது வசம்பு, சிறிய மஞ்சள் துண்டு மூன்றையும் நன்கு அரைத்து ஒரு வெற்றிலையில் வைத்து கால் ஆணிடில் வைத்து ஒரு துணியால் கட்டி வந்தால் ஒரு வாரத்தில் குணமாகி விடும்.
தொண்டைக்கட்டிற்கு:
தொண்டைக்கட்டிற்கு:
அதிமதுரத்தை நாட்டு மருந்து கடையில் வாங்கி இடித்து சலிக்கவும். ஒரு வேலைக்கு அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.
தலைவலி:
தலைவலி:
ஒரு ஸ்பூன் கிராம்பையும் ஒரு சிட்டிகை கல் உப்பையும் அரைத்து பற்று போட்டால் தலைவலி சரியாகும். அஜீரணம்: அரை ஸ்பூன் இஞ்சி சாறு, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.
மலச்சிக்கல்:
மலச்சிக்கல்:
வெங்காயத்தையும் முள்ளங்கியையும் அடிக்கடி சமையல் சேர்த்துக்கொள்ளவும். அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு சம பங்கு எடுத்து பவுடர் செய்து ஒரு ஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து சாப்பிடவும்.
Comments
Post a Comment