உலகம் முழுவதும் வருகின்ற பிப்ரவரி 9 ம் தேதி சாக்லேட் தினம் காதலர்களால்
கொண்டாடப்படுகிறது. காதலர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும்
கொண்டாடுகின்றார்கள். ஆனால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாக்லேட்
சாப்பிடலாமா கூடாதா என்ற சந்தேகங்கங்களுக்கு விடை புரியாமல் சந்தோஷமாக
சாக்லேட் சாப்பிட முடியாமல் தவிக்கிறார்கள். அவர்கள் சாக்லேட் சாப்பிடலாமா
கூடாதா என இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.
இந்த கேள்விக்கு விடை தெரிய வேண்டுமானால், சாக்லேட் எப்படி சர்க்கரை நோயாளிகளைப் பாதிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். கொகோ சாக்லெட்டில் குறைந்த கிளைசெமிக் குறியீடு இருப்பதால் அது அவ்வளவு தீவிரமான தாக்கத்தை உங்களுடைய ரத்த சர்க்கரை அளவில் ஏற்படுத்துவதில்லை.
டார்க் சாக்லேட்டில் உள்ள மற்றொரு காரணியானது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. சருமத்திற்கு தேவைப்படும் நீர்ச்சத்தைப் பாதுகாத்து எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. இதனால் தோல் சுருக்கம் அடைவதை குறைக்கலாம். அதனால் பெண்கள் சாக்லேட் வேக்ஸ், சாக்லெட் பேஸ்பேக் என்று ஆயிரக்கிணக்கில் செலவு செய்கிறார்கள்
கொகோ நல்லதா?...
நீரிழிவு நோயாளிகளுக்கு கொகோ நல்லது என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஏன் அவர்கள் சாக்லேட் சாப்பிடக் கூடாது என்றும் சொல்கிறார்கள் என்ற கேள்வி நம்முடைய மனதில் எழும்.இந்த கேள்விக்கு விடை தெரிய வேண்டுமானால், சாக்லேட் எப்படி சர்க்கரை நோயாளிகளைப் பாதிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். கொகோ சாக்லெட்டில் குறைந்த கிளைசெமிக் குறியீடு இருப்பதால் அது அவ்வளவு தீவிரமான தாக்கத்தை உங்களுடைய ரத்த சர்க்கரை அளவில் ஏற்படுத்துவதில்லை.
என்ன நடக்கும்?
சாக்லேட் சாப்பிட்டால் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த முடியும் என்பதை பலபேருக்கு நம்பமுடியாது. ஆனால் அதில் உள்ள இயற்கை காரணி ஆனது சர்க்கரை வியாதியை அதிகப்படுத்தாமல் பார்த்துக் கொள்கிறது. இதில் அதிக அளவு கொழுப்பும் அதேபோல் அதிக நார்ச்சத்தும் கொண்டிருக்கிறது. இவை இரண்டுமே ஜீரண சக்தியைத் தாமதப்படுத்தும். மில்க் சாக்லெட் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட டார்க் சாக்லெட்டுகளில் கிளைசெமிக் குறியீடு மிக அதிகமாக இருக்கிறது. ஆனாலும் கூடு அதில் சர்க்கரை சேர்க்கப்பட்டதால் குறைந்த கிளைசெமிக்கும் அதிக சர்க்கரையும் இருக்கிறது.டைப் 2 நீரிழிவு
உங்களுக்கு இன்னொரு நல்ல செய்தியும் காத்திருக்கிறது. டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு சாக்லேட் சர்க்கரை சேர்க்காத சாக்லேட் சாப்பிடுகிற பொழுது, அது இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. உடலில் உள்ள பீட்டா செல்களைத் தூண்டி, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. இவையிரண்டும் உங்களுடைய ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. அதிலும் குறிப்பாக நீங்கள் உணவு எடுத்துக் கொள்ளும் அதே வேளையில் சாக்லேட்டை சேர்த்து சாப்பிட்டால் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவின் கலோரியும் குறையும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் குறைக்கிறது.இதய ஆரோக்கியமும் மன அழுத்தமும்
சாக்லெட்டினால் உடல் ஆரோக்கியம் எப்படி பாதிக்கும் என்பது குறித்து ஏராளமான ஆய்வுகள் வந்துவிட்டன. குறிப்பாக, இதய ஆரோக்கியம் குறித்து ஏராளமான ஆய்வுகள் வந்துவிட்டன. சாக்லேட் சாப்பிடுவதால் அதில் உள்ள டிரைகிளிசரைடு ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் குறைத்து இதயத்துக்கு வலுவைச் சேர்க்கிறது. மன அழுத்தம் என்பது இன்றைய வாழ்க்கை முறையில் பலருக்கும் இருக்கக் கூடிய சராசரியான வியாதி போல் ஆகிவிட்டது. டார்க் சாக்லேட்டில் உள்ள ஒரு காரணி ஆனது, இயற்கையாகவே மன அழுத்தத்திலிருந்து விடுதலை தருகிறது என்று பலரும் கூறுகின்றனர். அதோடு நோய்த்தொற்றுக்கள் உங்களை நெருங்காமல் காப்பதாகவும் சொல்லப்படுகிறது.வேறு நன்மைகள்
ஒரு டார்க் சாக்லெட்டில் இவ்வளவு நன்மையா அதுவும் நம்முடைய புத்திசாலித்தனத்தை அதிகரிக்கும் அளவுக்கு அதில் சக்தி உள்ளதா என்றால் ஆம். நாம் மூளை சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட டார்க் சாக்லேட்டில் உள்ள ஒரு காரணி ஆனது பெரிதும் உதவுகிறது.டார்க் சாக்லேட்டில் உள்ள மற்றொரு காரணியானது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. சருமத்திற்கு தேவைப்படும் நீர்ச்சத்தைப் பாதுகாத்து எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. இதனால் தோல் சுருக்கம் அடைவதை குறைக்கலாம். அதனால் பெண்கள் சாக்லேட் வேக்ஸ், சாக்லெட் பேஸ்பேக் என்று ஆயிரக்கிணக்கில் செலவு செய்கிறார்கள்

Comments
Post a Comment